இந்தியன் கல்வி நிறுவனங்களுக்கான மெட்ரிக் சிபிஎஸ்இ, ஏ கே பி அகாடமி இணைந்து மாணவர் மற்றும் பெற்றோர் புதுமை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சுவாமி கல்வி நிறுவனம் அரிமா சுவாமிநாதன் பாண்டிச்சேரி ஆச்சாரியா கல்வி நிறுவனர் டாக்டர் அரவிந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தனர், மற்றும் இந்தியன் கல்வி நிறுவனர் தலைவர் அரிமா பி.பழனிவேல் செயலாளர் பி வி தமிழ் முருகன் பொருளாளர் அருள்மணி முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
இதில் அதிசயமாக கண்களை துணியால் கட்டிக்கொண்டு ஓவியம் வரைதல் எண்களை சொல்லுதல் போன்ற பல்வேறு திறன்களை வெளிப்படுத்தினர் இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பார்வையாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில் மாணவ மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.