மாரண்டஅள்ளி, ஆக.21:
இதனால் பதற்றமடைந்த காவல்துறை, தகவலை உடனடியாக மாரண்டஅள்ளி காவல் நிலையத்துக்கு தெரிவித்தது. அங்கு போலீசார் முழு காவல் நிலையத்தையும் சோதனை செய்தபோதும் எங்கும் வெடிகுண்டு கிடைக்கவில்லை. இதையடுத்து பொன்முடியை தேடி காவல்துறையினர் குஜ்ஜாரஅள்ளிக்கு சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்த நிலையில், நேற்று மாலை மாரண்டஅள்ளி பேருந்து நிலையம் அருகே பொன்முடி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சென்று அவரை கைது செய்து, பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் பொன்முடி, “நான் அடிக்கடி 100 என்ற எணுக்கு போன் செய்து பேசுவேன். அதுபோல் தான் அந்த நாளும் வெடிகுண்டு வைத்ததாக பொய் கூறிவிட்டேன்” என ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.