தகடூர் புத்தக பேரவையின் ஆலோசனை கூட்டம் தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தில் இரா. சிசுபாலன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகர் இரா. மாதேஸ்வரன் வரவேற்புரையாற்றினார். தகடூர் புத்தக பேரவையின் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசும்போது வருகின்ற ஜூன் 24ந்தேதி முதல் ஜூலை 4-ஆம் தேதி வரை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த புத்தகத்திருவிழா சார்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும், புத்தகத் திருவிழாவில் தர்மபுரி நாள் என்று ஒரு சிறப்பு நாளை ஒதுக்கி தர்மபுரியின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக திட்டமிடுதல், பள்ளி கல்லூரி மாணவர்களை புத்தகத்திருவிழாவில் பெருமளவில் கலந்து கொள்ள செய்வது மாவட்டத்தில் இருக்கும் கடைக்கோடி மக்களுக்கும் புத்தகத்திருவிழா செய்தி கொண்டு சேர்ப்பது உள்ளிட்டவை பற்றி விளக்கி கூறினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், இளைஞர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தகடூர் புத்தக பேரவை நடத்தும் புத்தக கண்காட்சி அரசுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆலோசனை வழங்கினார்கள்.
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் கூத்தப்பாடி பழனி அனைவருக்கும் நன்றி கூறினார்.