Type Here to Get Search Results !

ரூ.4.16 லட்சம் மதிப்பிட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைத்த பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி  அண்ணாநகரின்  பகுதி  மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று இன்று பாப்பிரெட்டிப்பட்டி  சட்ட மன்ற உறுப்பினர்  மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.16.இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை  பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர்,கோவிந்தசாமி, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அதிமுக  கட்சியின் மாவட்ட  பொருளாளர், K.நல்லத்தம்பி, ஒன்றிய கழக செயலாளர்கள், விஸ்வநாதன், மதிவாணன், சிவப்பிரகாசம், நகர செயலாளர், தென்னரசு, நகர அவைத்தலைவர் மதியழகன், மாவட்ட பிரதிநிதி மஞ்சுளா, கிளை செயலாளர் சம்பத், முருகன் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் இருந்தனர்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies