Type Here to Get Search Results !

அரூரில் மாநில மகளிர் ஆணையம் சார்பில் இளம்பெண் திருமணம் குறித்த மகளிருக்கு விழிப்புணர்வு முகம்.

அரூரில் உள்ள சமுதாயக் கூடத்தில்  மகளிர் மன்ற குழுவினருக்கு இளம் பெண்கள் திருமணம் குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது, தர்மபுரி மாவட்டம், அரூர்  பேரூராட்சிக்குட்பட்ட சந்தைமேடு பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் மாநில மகளிர் ஆணையத்தின் சார்பாக மகளிர் குழுவினருக்கு விழிப்புணர்வு முகாம் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி தலைமையில் பேரூராட்சி  தலைவர்  இந்திராணிதனபால் முன்னணியில் நடைபெற்றது. முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பத்மாமாரியப்பன் வரவேற்றார்.

இந்த முகாமில் டாக்டர் மாலதி நாராயணசாமி பேசும்பொழுது இளம் பெண் திருமணம் எங்கு நடந்தாலும் மகளிர் குழுவினர் போலீசாருக்கு  தகவல் தெரிவிக்க வேண்டும். வரதட்சணை கொடுப்பதும் தவறு. பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்கள் மீது பயப்படாமல் போலீசில் புகார் கொடுக்கவேண்டும் அல்லது அதற்கென்று தனி செயலினை  போலீசார் உருவாக்கியுளளனர் அதன்மூலம் செல்போனிலேயே புகார் கொடுக்கலாம். 

மகளிர் மன்றங்களுக்கு அரசு வழங்கும் மானியம் பற்றி மகளிர் குழுவினருக்கு எடுத்துரைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள் முல்லைரவி அருள்மொழி உமாராணி   ஊக்குநர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies