Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஆ தள்ளு தள்ளு தள்ளு அரசு பேருந்தின் அவலம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து நகர மற்றும் புறநகர் பேருந்துகள் சுமார் 50 தினமும் இயக்கப்பட்டு வருகிறது, இதில் நகர பேருந்துகள் கிராம பகுதிகளுக்கும் பள்ளி-கல்லூரி பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் குறிப்பிட்ட வழித்தடமான 6- நம்பர் நகரப்பேருந்து காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி வழியாக  காலை மாலை என இருவேளைகளிலும் மாணவிகள் பயணம் மேற்கொள்கின்றனர் வருகிறது. 

இந்த வழித்தடத்தில் செல்லும் 6- நம்பர் பேருந்து அடிக்கடி பழுது ஏற்பட்டு தள்ளு தள்ளு என்ற வடிவேலின் வசனத்திற்கு ஏற்ப மாணவிகளும் பொதுமக்களும் தள்ளும் நிலைமைக்கு இப்பேருந்து பலமுறை தள்ளப்பட்டுள்ளது- இதனால் மாணவிகள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இன்று காரிமங்கலம் நகர பகுதியில் சாலையின் நடுவே நின்ற பேருந்தை சகபயணிகள் தள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884