Type Here to Get Search Results !

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஜூன் 5-ல் சிறப்பு கிராம சபைக் கூட்டம். – தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, ஜூன் 3:


தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 05.06.2026 அன்று முற்பகல் 11.00 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.


கூட்டம் நடைபெறும் இடம் தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை நடைபெற்று வரும் “Swachh Gaon, Surakshit Jalvayu” (Clean and Green Village) இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள், நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் செயல்படுத்தல் தொடர்பாக விவாதிப்பதற்காக இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.


மேலும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் வட்டார அளவிலும், ஊராட்சி அளவிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


எனவே, பொதுமக்கள் தங்களது கிராம ஊராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை மற்றும் பசுமை கிராம மேம்பாடு தொடர்பான கருத்துகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies