Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

கோரோனாவினால் உறவுகளை இழந்தோர் கவனத்திற்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு.

கோவிட்‌-19 பெருந்தொற்றினால்‌  பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின்‌ வாரிசுகளுக்கு கருணைத்‌ தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத்‌ தளம்‌ மூலம்‌ மனுக்கள்‌ பெறப்பட்டு மாவட்டங்களில்‌ அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும்‌ குழுவின்‌ மூலம்‌ பரிசீலிக்ப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில்‌ இதுவரை 1243 மணுக்கள்‌ பெறப்பட்டு 1040 இனங்களுக்கு ரூ.50,000/- வீதம்‌ நிவாரணத்‌ தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும்‌ 126 மனுக்கள்‌, இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில்‌ நிராகரிக்கப்பட்டது. 

இந்நிலையில்‌, மாண்புமிகு உச்சநீதி மன்ற வழக்கு எண்‌ I.A.No.40111/2022 in M.A.No.1805/2021  in W.P. 599/2021, தீர்ப்புரை நாள்‌ 20.03.2022-ல்‌ வழங்கிய தீர்ப்பில்‌ கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. 20.03.2022-க்கு முன்னர்‌ ஏற்பட்ட கோவிட்‌-19 இறப்புகளுக்கு நிவாரணம்‌ கோரும்‌ மணுதாரர்கள்‌ வரும்‌ 60 நாட்களுக்குள்‌ (18.05.2022 தேதிக்குள்‌) மனுக்கள்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.
  2. 20.03.2022 முதல்‌ ஏற்படம்‌ கோவிட்‌-19 இறப்புகளுக்கு நிவாரணம்‌ கோரும்‌ மனுதாரர்கள்‌ இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள்‌ மனுக்கள்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.
  3. சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள்‌ மீது சம்மந்தப்பட்ட நிர்வாகம்‌ 30 தினங்களுக்குள்‌ தீர்வு காண வேண்டும்‌.
  4. மேற்குறிப்பிட்டுள்ள காலக்‌ கெடுவிற்குள்‌ நிவாரணம்‌ கோரி மணு சமர்ப்பிக்க இயலாதவர்கள்‌ அது குறித்து மாவட்ட வருவாய்‌ அலுவலரிடம்‌ முறையீடு செய்து கொள்ளலாம்‌. இவ்வாறு பெறப்படும்‌ முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின்‌ அடிப்படையில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்‌.

எனவே, கோவிட்‌-19 தொற்று நோயின்‌ காரணமாக இறந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு மேற்கண்ட உச்சநீதி மன்ற வழிகாட்டுதலின்‌ படி, உரிய காலத்தில்‌ மணு செய்து நிவாரணம்‌ பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌, என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.ச.திவ்யதர்சினி,ஆப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884