Type Here to Get Search Results !

பாலக்கோடு கோட்ட துணை மின் நிலைய புதிய செயற்பொறியாளராக சரவணன் பொறுப்பேற்பு.


தருமபுரி, ஜூன் 7:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கோட்ட துணை மின் நிலையத்தின் புதிய செயற்பொறியாளராக சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையொட்டி மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.


பாலக்கோடு கோட்ட துணை மின் நிலைய செயற்பொறியாளராக பணியாற்றி வந்த வனிதா, மேட்டூர் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆறு மாதங்களாக முனிராஜி பொறுப்பு செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார்.


இந்நிலையில், தமிழ்நாடு அரசு சரவணனை பாலக்கோடு கோட்ட துணை மின் நிலையத்தின் புதிய செயற்பொறியாளராக நியமித்துள்ளது. அதன்படி, வெள்ளிச்சந்தையில் உள்ள பாலக்கோடு கோட்ட துணை மின் நிலையத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


சரவணன், இதற்கு முன்பு தருமபுரி மின்வாரிய மேற்பார்வை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது பதவி உயர்வு பெற்று செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட சரவணனை மின்வாரிய அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அவரது பணிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.


இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் சுரேஷ், சங்கர்குமார், மோகன்குமார், உதவி பொறியாளர்கள் சுஜாதா, சேகர், முரளி, விஜயகுமார், சத்தியா, திவாகர், ரமேஷ், மாதேஷ், வெங்கடேஷ், பாரதிராஜா, சிவக்குமார், முபாரக் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies