Type Here to Get Search Results !

மாரியம்மன் திருவிழாவுக்கு வந்த இளம்பெண் மாயம்: தந்தை புகாரின் பேரில் போலீசார் விசாரணை.


தருமபுரி, ஜூன் 7:


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஜிட்டிகான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திடீரென மாயமான நிலையில், அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜிட்டிகான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவலிங்கம். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.


இவர்களது மகள் வித்யா (24), பி.எஸ்.சி. வேளாண்மை பட்டப்படிப்பை முடித்துவிட்டு, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக வித்யா சொந்த ஊருக்கு வந்திருந்தார். திருவிழா நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் உறங்கச் சென்றுள்ளனர்.


அடுத்த நாள் காலை எழுந்து பார்த்தபோது வித்யாவை காணவில்லை. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் வித்யா குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், அவரது தந்தை சிவலிங்கம் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பாலக்கோடு போலீசார், மாயமான வித்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies