Type Here to Get Search Results !

கார் மோதி கட்டிட மேஸ்திரி பலி.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த அதியமான் கோட்டை ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது38). இவர் மேஸ்திரி வேலை செய்து வந்தார்.

நேற்று தருமபுரி அடுத்த பைசுஅள்ளி பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட வேலை செய்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.  அப்போது பைசுஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக லட்சுமணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies