Type Here to Get Search Results !

நாட்டுப்புறவியல் தேசியக் கருத்தரங்கம் நிறைவு விழா.

தருமபுரி மருதம் நெல்லி கல்விக் குழுமம், பென்னாகரம் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தமிழ்த்துறை), பெரம்பலூர் சங்க இலக்கிய ஆய்வு நடுவம் இணைந்து 20 நாட்கள் இணைய வழியில் நாட்டுப்புறவியல் தேசியக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. 18.01.2022 முதல் தொடங்கிய கருத்தரங்கம் 06.02.2022 வரை நடைபெற்றது. 
நாட்டுப்புறவியல் குறித்து பல்வேறு பொருண்மையில் பேராசிரியர் பெருமக்கள், தமிழறிஞர்கள் உரையாற்றினார்கள். இதற்கான நிறைவு விழா இன்று (6.2.2022) இணையவழியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் க. கோவிந்த் தலைமை வகித்தார். 

ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ம.இராஜகணபதி வரவேற்றார். பெரம்பலூர் சங்க இலக்கிய ஆய்வு நடுவத்தின் நிறுவனர் முனைவர் சே.சுரேஷ் , கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சி.காமராஜ்  முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக  சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மா. பழனி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். பென்னாகரம் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் மற்றும் மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவையின் பொறுப்பாளர், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் நா.நாகராஜ் நன்றி தெரிவித்தார். கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கணிதத் துறை மாணவி கோ.ஷிலா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

இக்கருத்தரங்கில் தமிழகத்திலுள்ள பல கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் , வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies