தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பில் பருத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இளையோர்களுக்கான நல்வாழ்வு நேர்மறை நடைமுறை மற்றும் ஆரோக்கியமான இந்தியா- சுயசார்பு இந்தியா ஆகியவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பி பள்ளிப்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். அவார்டு தொண்டு நிறுவன இயக்குநர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.ஆதியோகி யோகா பயிற்சி மைய ஆசிரியை ஜெயபிரியா, எல்ப் தொண்டு நிறுவன இயக்குநர் கருணாமூர்த்தி,ஐடியல் தொண்டு நிறுவன இயக்குநர் முனைவர் மனோகரன், ஸ்பீடு தொண்டு நிறுவன துணைத்தலைவர் பெருமாள் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மூன்றாம் கரம் தொண்டு நிறுவன தலைவர் அறிவழகன், சரண்யா தையல் பயிற்சி நிறுவன உரிமையாளர் சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50க்கும் மேற்ப்பட்ட மகளீருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் விக்னேஷ் நன்றி கூறினார்.
.gif)
