Type Here to Get Search Results !

மொரப்பூரில் சுயசார்பு இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் தொழில் வழிகாட்டல் மற்றும் கலந்தாலோசனை, இளையோர்களுக்கான சுய சார்பு இந்தியா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மொரப்பூர் விப்ரோ தொண்டு நிறுவன மையத்தில் அதன் இயக்குநர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் நிதிசார் ஆலோசனை மையத்தைச் சார்ந்த எழில்மணி, அரூர் எல்ப் தொண்டு நிறுவன இயக்குநர் கருணாமூர்த்தி, ஸ்பீடு தொண்டு நிறுவன துணைத்தலைவர் பெருமாள், ஸ்பார்க் தொண்டு நிறுவன இயக்குநர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன், தையல் பயிற்சி ஆசிரியை எழிலரசி, விப்ரோ தொண்டு நிறுவன வட்டார ஒருங்கிணைப்பாளர் திலகவதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிறைவாக நேரு யுவ கேந்திராவின் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர் சேதுபதி நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies