Type Here to Get Search Results !

நேரு யுவகேந்திரா சார்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் விளையாட்டு போட்டிகள்.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது. கபடி, கைப்பந்து போட்டிகள், 100மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல் உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன. 

பரிசளிப்பு விழாவில் காவல் ஆய்வாளர் லதா கலந்து கொண்டு வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்தி பேசினார். 

விளையாட்டு போட்டிகளின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெகஜீவராம், அங்கேஸ்வரன் பணியாற்றினர். நிறைவாக பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர்கள் விக்னேஷ், முனியரசன் நன்றி கூறினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies