கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முதன் முறையாக மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது தேர்தலை ஒட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், சுமூகமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கும் ஓசூர் டிஎஸ்பி சிவலிங்கம் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி காலை நடைபெற்றது.
அணிவகுப்பில் தமிழக சிறப்பு பட்டாலியன் போலீசார் மாவட்ட ஆயுத படை போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் உட்பட 200க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பில் பேரணியாக சென்றனர்.
அணிவகுப்பு தாலுக்கா அலுவலக சாலை தேன்கனிக்கோட்டை சாலை மகாத்மா காந்தி சாலை பாகலூர் சாலை போன்ற முக்கிய பகுதியின் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.
.gif)
