Type Here to Get Search Results !

நேரு யுவ கேந்திராவின் சார்பில் இந்திய குடியரசு தினம் மற்றும் அரசியலமைப்பு தின கொண்டாட்டம்.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் இந்திய குடியரசு தினம் மற்றும் அரசியலமைப்பு தினம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சென்றாயனள்ளி கிராமத்தில் கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி நந்தி சிவன் தலைமையில் நடைபெற்றது.ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தீபா சேகர் முன்னிலை வகித்தார். கட்டுரை, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மனித உரிமைகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜா, சென்னை உயர்நீதிமன்ற மன்ற வழக்கறிஞர் ரவி, வார்டு உறுப்பினர் தங்கராஜ், சமூக ஆர்வலர் பிறைசூடன்,சென்றாயனள்ளி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பழனிச்சாமி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்று நோக்கவுரை வழங்கினார். 100 க்கும் மேலான இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies