Type Here to Get Search Results !

பாரதமாதா மக்கள் சிந்தனை குழு சார்பில் 73வது குடியரசு தின விழா.

பாரதமாதா மக்கள் சிந்தனை குழு சார்பில் 73வது குடியரசு தின விழா தர்மபுரி மகாத்மா காந்தி சாலையில் உள்ள பாரத மாதா மணி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாரத மாதா மக்கள் சிந்தனை குழுவின் தலைவர் திரு.மா. பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் செயலாளர் திரு வா. சௌந்தரபாண்டியன் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பாரத மாதா தேவி சிலைக்கு
தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க மாவட்ட பொருளாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்களும் தர்மபுரி ராதா ஸ்டோர் உரிமையாளர் திரு.மாதேஷ்ஸ்வரன் அவர்களும் மாலை அணிவித்தனர்.

மகாத்மா காந்திஜி அவர்களின் சிலைக்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்களும் ரோட்டரி எலைட் கிளப் தலைவர் திரு.பி. சந்தோஷ் குமார் அவர்களும் மாலை அணிவித்தனர்.

மனிதப் புனிதர் ஜவர்கலால் நேரு அவர்களின் சிலைக்கு அன்னை கஸ்தூரிபாய் சேவா சங்க தலைவர் திரு.சி.சக்திவேல் அவர்களும் தணிக்கை கண்காணிப்பாளர் திரு.சையது வாஹித் அவர்களும் மாலை அணிவித்தனர்.

பாரத மாதா மக்கள் சிந்தனை குழுவின் பொருளாளர் திரு.சந்திரமோகன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பாரத மாதா மக்கள் சிந்தனை குழுவின் மக்கள் செய்தி தொடர்பாளர் திரு.வினோத், நற்சுவை சுகுமார், சாய்ராம் கார்த்திகேயன், ராஜா கிருஷ்ணன், ராம், ஹரிணி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் பொது மக்களுக்கும் தர்மபுரி ஸ்ரீ சாய் சர்வீஸ் டிரஸ்ட் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies