இந்தியாவில் பல ஆண்டுகளாக தலித் கிறிஸ்தவ சமுதாயத்தை சார்ந்த மக்கள் சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டு தீண்டாமைக்கு உள்ளாகி அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு சமூகத்திலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் பின்தங்கி உள்ளனர். மேலும் அவர்களுக்கு சமுதாயத்தில் சம உரிமைகள் வேண்டி கடந்த 71 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலித் கிறிஸ்தவர்கள் போராட்டங்களை நடத்தினர். ஆனால் இன்று வரையில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
எனவே தலித் கிறிஸ்துவ மக்களின் பல ஆண்டு கோரிக்கைகளான, தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும், அரசின் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும். என வேண்டி இந்தியா மற்றும் தமிழகத்தில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் நவம்பர் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாட்களில் தலித் கிறிஸ்தவ விடுதலை நாள் என ஒதுக்கி தங்களுக்கு சம உரிமைகள் கிடைக்க வேண்டியும் , தங்கள் இனத்தை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டியும் , அனைத்து மனிதர்களும் சாதி பாகுபாடின்றி வாழ வேண்டியும் பல ஆண்டுகளாக நவம்பர் மாதத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரைக்கோட்டை கார்மேல் அன்னை ஆலயத்தில் அரூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தென்கரைக்கோட்டை, மெணசி, கொக்கராப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஏராளமான தலித் கிறிஸ்தவ மக்கள் இன்று ஒன்றினைந்து சாதி பாகுபாடு வேண்டாம், தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, அனைத்து பொதுமக்களும் சாதி பாகுபாடு இன்றி வாழ வேண்டும், தலித் கிறிஸ்தவ இனத்தை பட்டியல் இனத்தில் சேர்க்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறவேண்டும் என தெரிவித்து சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், DSSS இயக்குனரும் SC/ST பணிக்குழுவின் செயலருமான அருட்தந்தை ஏசுதாஸ், ஆயரின் செயலர் சிரில் பவுல்ராஜ், தென்கரை கோட்டை பங்குதந்தை வினோத் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பிராத்தனை செய்தனர். அதனைத் தொடர்ந்து தருமபுரி ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்.
.gif)
