தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒருவாரத்திற்கு மேலாக தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று பெண்ணாகரம் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள முள்ளுவாடி, எட்டியாம்பட்டி, கோடியூர், ஆணைகல்லானூர், நூலஅள்ளி, மோட்டுபட்டி, மாங்கரை உள்ளிட்ட ஏரிகள் நிரம்பின.
மேலும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகள் உள்ள சேர்ந்த குளங்கள், ஏரிகள், குட்டைகள் ஆகியவை வேகமாக நிரம்பின. அங்கு பெய்த கனமழையின் காரணமாக பென்னாகரத்தில் இயங்கிவரும் மத்திய கூட்டுறவு வங்கிக்குள் தண்ணீர் புகுந்தது. கடந்த 10ஆண்டுக்கு பின்னர் இங்கு உள்ள ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையின் காரணமாக ஏரிகள் நிரம்பியதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
.gif)
