இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்வதற்காக வரப்புகளை சீர் செய்து கொண்டிருக்கும் பொழுது தனது நிலத்தின் அருகாமையில் உள்ள ராம்குமாரின் நிலத்தை சேர்த்து வரப்புகளை வெட்டியுள்ளார். இதனால் ராம்குமாரின் உறவான கலைச்செல்வன், மாணிக்கம், அண்ணாமலை, ரஷ்யா, இவர்கள் சென்னகிருஷ்ணனிடம் எதற்காக எங்கள் நிலத்தையும் சேர்த்து வரப்புகளை உங்களுக்கு வெட்டுகிறீர்கள் இது சரியா என்று வாக்குவாதம் செய்து உள்ளார்கள்.
இதனால் சென்ன கிருஷ்ணன், உருவான ராமகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், இந்திரா, கவிதா, மாதேஸ்வரி, இவர்கள் சேர்ந்து ராம்குமாரின் உறவினரும் சென்னகிருஷ்ணனின் உறவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாகி பிறகு ராம்குமாரின் தரப்பிலிருந்து சென்னகிருஷ்ணனை அரிவாளால் தலையில் வெட்டி உள்ளனர், பலமான காயம் ஏற்பட்டுள்ளதால் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தற்போது சென்னகிருஷ்ணன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னகிருஷ்ணனை தாக்கிய ராம்குமார், கலைச்செல்வனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றும் இரு தரப்பின் மீதும் இந்திய தண்டனை சட்ட பிரிவு 307 கொலைமுயற்சியாக பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராம் குமார் என்பவர் சென்னையில் ரேஷன் கடை பணியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் மணிபாரதி.