அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்துக்குட்பட்ட பட்டவர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் தனபால் இவருடைய மகன் சிவா வயது 18 பத்தாம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ரஜேஷ் மகளும் காதலித்துவந்ததாக கூறப்படுகிறது .
இந்நிலையில் இருவரும் கடந்த 6 ஆம் தேதி வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டதாக கூறப்படுகிறது இதுகுறித்து சிறுமியின் தந்தை சரவணன் (பெயர் மற்றம் செய்யப்பட்டுள்ளது) பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் தனது மகள் காணவில்லை என்று புகார் அளித்தார்.
தந்தை அளித்த புகாரின் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியையும் சிவாவையும் தேடிவந்த நிலையில் சிவா சிறுமியை அழைத்துக் கொண்டு திருப்பூரில் இருக்கும் தனது உறவுமுறை மாமாவின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் தகவலறிந்த அ.பள்ளிப்பட்டி காவல்துறையினர் திருப்பூருக்கு சென்று இருவரையும் மீட்டு அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர் பிறகு சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட பிறகு சிவா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- செய்தியாளர் நந்தகுமார்.