தருமபுரி மாவட்டத்தில் வரும் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடை வைக்கக் விண்ணப்பிப்போர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் (வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008 இன்படி) தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்களில் இணைய வழியாக 22.10.2021-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க காலஅளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
22.10.2021 ஆம் தேதிக்கு பின்னர் வரும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் பொழுது இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
- விண்ணப்பதாரர் புகைப்படம்,
- முகவரிச் சான்று,
- புகைப்படத்துடன் கூடிய ஆதார்/பான் கார்டு/வாக்காளர் அடையாள அட்டை, Etc.,
- பட்டா அல்லது சொத்து பத்திரம்,
- வாடகைக் கட்டடமாக இருந்தால் நோட்டரி வழக்கறிஞரின் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்தப்பத்திரம் மற்றும் உரிமக் கட்டணமாக ரூ.500/- செலுத்தி அதற்கான அசல் சலான்,
- சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வரி செலுத்திய இரசீது மற்றும் கட்டட வரைபடம்-2 பிரதிகள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.