Type Here to Get Search Results !

சிறப்பு பார்வை: தருமபுரி மாவட்டத்தின் "மக்கள் மருத்துவர்" ராஜேந்திரன்.

என் முதல் மனைவியே என் மருத்துவ சேவை மனம் திறந்த மருத்துவர் ராஜேந்திரன் என மக்களின் சேவையே முதன்மையாக கொண்டு சேவை செய்துவரும் மருத்துவர். ராஜேந்திரன் அவர்கள்.

கொரோனா காலத்தில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு சிகிசிக்காக அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனைகளிலும், சிகிச்சிகாக இடம் கிடைக்காமல் கொரோனாவல் பாதிக்கபட்ட கண்ணீர் வடித்ததை செய்திகளிலும் இணையதளத்திலும் பார்த்து அனைவரும் மனம் நொந்து போனார்கள், அந்த நேரத்தில் பலபேருக்கு காய்ச்சல், ஜலதோசம், இருமல், தும்மல், இருந்தது. மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பலபேர் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து கடைகளில் மருந்து வாங்கி உட்கொண்டனர். 

இவர்களில் பல்லாயிர கணக்கானோர் கொரோனாவால்  பாதித்தது குறிபடிதக்கது. பிறகு உடல் நிலை சீரியசான போதுதான் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதனால் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவருக்கும், செவிலியர்களுக்கும், கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவர்களும், செவிலியர்களு்கும் இறந்து போனார்கள், இதனால் பல்வேறு தனியார் மனைகள் மூடப்பட்டது. இதன் எதிரொலியாக அனைவரும் அரசு மருத்துவமனையை நோக்கி பயணம் செய்தனர். 

பிறகு அரசு மருத்துவமனை நிரம்பி வழிந்தது , முன்னால் இருந்த அரசு தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சோதனை மற்றும் மருத்துவமும் பார்க்கலாம் என்று அனுமதி தந்தது. அப்போதும் கூட பல தனியார் மருத்துவமனைகள் திறக்கவில்லை, ஒரு சில மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக நோயாளிகளிடம் கட்டணத்தை தாறுமாறாக வாங்கிஉள்ளனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் மருத்துவர் ராஜேந்திரன் கொரோனா தொற்று உருவான நாட்களிலிருந்து, மருத்துவமனையை மூடாமல் , ஓய்வின்றி  மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம்  சாதாரண நாட்களில் வாங்கிய கட்டணத்திலே   மருத்துவம் பார்த்துள்ளார், மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்களுக்கும் பாதுகாப்பு உரைகள் மற்றும் உடைகள் வழங்கப்பட்டு செவிலியர்களை பணியாற்ற செய்திருக்கிறார். கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க அறிவுரை கூறி விழிப்புணர் செய்திருக்கிறார். 

இவர் செய்யும் பணிகள் மற்றும் சேவைகளை கண்டு வேல்லஸ் நிறுவனம் இந்தியாவில் கொரோனா காலத்தில்  சிறந்த மருத்துவ சேவையாற்றிய 5000 ஆயிரம் மருத்துவர்களை தேர்வு செய்து ரிசர்வ் வங்கியின் மூலம் அனுமதி பெற்று இவருடைய பிறந்தநாளான  24-07-1944 அந்த எண்ணில் 10 ரூபாய் நோட்டு அச்சடித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

இப்படி ஒரு தனிநபரின் பிறந்த என்னை வைத்து 10 ரூபா நோட்டு தாளில் அச்சிட்டு தந்தது ஆச்சர்யமும் பெருமையான விஷயமும் ஒன்று, மற்றும் இந்து தமிழ் திசை மூலமாக GRT நிறுவனமும் இணைந்து மருத்துவர் ராஜேந்திரனை பாராட்டி விருதுகள் தந்துள்ளது, மற்றும் பூனேவில் உள்ள லையன்ஸ் கிளப், வேல்லஸ் , லைஃப் ஸ்டைல் நிறுவனம் சேர்ந்து பரிசுகள் தந்துள்ளது, இது போன்று மருத்துவர்கள் இருப்பது மக்களுக்கும் இந்த சமூகத்திற்கும் மகிழ்ச்சியானது. இன்னும் எத்தனையோ மருத்துவர்கள் இது போன்று சேவைகள் செய்து கொண்டு மறைமுகமாக இருப்பது என்னவோ ஆச்சர்யம்தான் மீண்டும் வேறொரு மருத்துவரோடு சந்திப்போம்.

- செய்தியாளர் MSP மணிபாரதி. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884