தருமபுரி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தர்மபுரி, பென்னாகரம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை நேரடியாக சென்று திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள மாணவியர் விடுதிக்கு சென்ற அமைச்சர் சிவசங்கர் அவர்கள் விடுதியில் உள்ள வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பொழுது மாணவியர் விடுதி காப்பாளரிடம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
பின்னர் விடுதி காப்பாளர் அறையில் பராமரிக்கப்படும் கோப்புகளை பார்வையிட்டு குறிப்பு எழுதினார். அப்பொழுது உடன் திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ இன்பசேகரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் காளியப்பன், நகர செயலாளர் வீரமணி, பூவண்ணன், பாலு, சேலம் ஹோட்டல் வினு உள்ளிட்ட பலர் இருந்தனர்.