தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ரூ.23 இலட்சம் மதிப்பில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கூடைப்பந்து மைதானம் திறப்பு விழா மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மாவட்ட கழக செயலாளரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு கூடைப்பந்து மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது: காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
ஏற்கனவே ரூ.5 இலட்சம் மதிப்பில் கூடைப்பந்து மைதானம் அமைக்க பட்டது.ஆனால் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு மாணவர்கள் மற்றும் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு வேண்டுகோளை ஏற்று தன்னிறைவு திட்டத்தின் மூலம் ரூ.23 இலட்சம் மதிப்பில் இந்த கூடைப்பந்து மைதானம் அமைக்க பட்டு திறக்கப்படுகிறது.
கல்வி துறையில் கழக அரசு எண்ணற்ற சாதனைகள் செய்து உள்ளது.
புரட்சி தலைவர் காலத்தில் சத்துணவு திட்டம், புரட்சி தலைவி அம்மா அவர்கள் 14 வகையான பொருட்கள், கொடுத்தார். பள்ளி பருவத்தில் தேர்ச்சி பெறாமல் போனால் , உடன் தேர்வு உருவாக்கி தந்தவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்.மருத்துவர் கணவை 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் மாணவர்கள் மருத்துவர்களாக எடப்பாடியார் உருவாக்கியுள்ளார்.435 மாணவர்கள் கடந்த ஆண்டு டாக்டர்களாகி உள்ளனர்.தர்மபுரி மாவட்ட த்தில் 27 பேர் மருத்துவர்களை உருவாக்கியுள்ளார்.அரூர், தர்மபுரி, பாலக்கோடு என மூன்று கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டது.கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியது கழக அரசு.
உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மாற்றியதும் கழக அரசு நான்கு மாத காலத்தில் வேளாண்மை துறை அமைச்சராக இருந்து போது இம்மாவட்டத்தில் வேளாண்மை பட்டய படிப்பு, தோட்டகலையில் பட்டய படிப்பு ஆகியவை கொண்டு வந்து அரசாணை வெளியிட பட்டு அதற்காக 92 ஏக்கர் இடம் தேர்வு செய்ய பட்டும் இந்தாண்டு மாணவர் சேர்க்கை இந்த திமுக அரசு நடத்தவில்லை.பந்தாரஹள்ளி,பொம்மஹள்ளி,கன்னிப்பட்டி என அனைத்து பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டது.
கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியது கழக அரசு மட்டுமே என்று பேசினார், இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வே.சம்பத்குமார், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி சதீஷ் குமார், மாவட்ட கழக அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பூக்கடை பி.ரவி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை உறுப்பினர் பி.ரவிசங்கர், டாக்டர் கே.பி.அ.சந்திரமோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உறுப்பினர், காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளா் செந்தில்குமார், காரிமங்கலம் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், ஒன்றிய குழு துணை தலைவர் செல்வராஜ், பாலக்கோடு ஒன்றிய கழக செயலாளா் கோபால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கலைச்செல்வி, அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சிவம், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சரவணபிரபு, தர்மபுரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவிந்தசாமி, வழக்கறிஞர் பாரதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள்,மாது,கணபதி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சந்திரன், புதூர் சுப்பிரமணி,அரூர் ஒன்றிய கழக செயலாளா் பசுபதி, பாலக்கோடு முன்னாள் நகர கழக செயலாளர் ராஜா, அரூர் ஒன்றிய குழு உறுப்பினர் சிவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சாந்தகுமார், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கெளதமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு சொக்கலிங்கம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.