பென்னாகரம் பேரூராட்சியில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, முள்ளுவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி, முள்ளுவாடி பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் இன்று 378 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. பென்னாகரம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, முள்ளுவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி, முள்ளுவாடி பேருந்து நிறுத்தம் ஆகிய மூன்று இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.சிறப்பு தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்வத்துடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.
இதில் முள்ளுவாடி பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி மையத்தில் பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி கீதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், அப்பொழுது சுகாதார ஆய்வாளர் மதியழகன் உடன் இருந்தார்.