கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தமிழக அரசின் உத்தரவின் படி, பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் படித்து வரும், 10ஆம் வகுப்பு மாணவனும், மாணவியும் பள்ளி வளாகத்தில் அத்துமீறியுள்ளனர். அவர்கள் இருவர் செய்யும் சில்மிஷத்தை அருகே இருந்த பள்ளி மாணவி ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது தருமபுரி மாவட்டம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது. இதனை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி மாணவன் மற்றும் மாணவியின் பெற்றோரை அழைத்து டி.சி கொடுத்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.
ஆன்லைன் வகுப்புகளுக்காக பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்த செல்போனை, மாணவர்கள் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மேலும், சமீப காலமாக பெற்றோர்களுக்கு கொரோனா காலத்தில் ஏற்பட்ட பணம் நெருக்கடி காரணமாக அதிக வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். பணம் சம்பாதிக்கும் நோக்கில் அவர்கள் தங்களின் பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து கவனிக்க மறந்து விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் ராஜ்குமார்.