உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு தி மு க கட்சியை சேர்ந்த லதா தேர்தல் அதிகாரியின் முன்பு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணியம் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் சேர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு பா ம க கட்சி சார்பில் வேட்பாளர் ஶ்ரீகாந்த் மற்றும் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேஷ் இமையவர்மன் மாவட்ட தலைவர் , அருள் கண்ணன் ஒன்றிய செயலாளர், பன்னீர் மாவட்ட தலைவர், ஆலாபுரம் பஞ்சாயத்து தலைவர் சின்றாஜ் , விஜியன் ஒன்றிய செயலாளர், மாநில பொறுப்பாளர் சாந்த மூர்த்தி மாநில இளைஞர் அணி செயலாளர் வக்கில் ஆனந்த ஆகியோர் சேர்ந்து தேர்தல் அதிகாரி முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிமுக சார்ப்பில் 18 வது வார்டு மாவட்ட குழு உறுப்பினருக்கு போட்டியிடும் வேட்பாளர் தீ.கண்ணன் தேர்தல் அதிகாரி அருள்மொழி தேவன் இடம் வேட்புமனு தாக்கல் செய்தார், உடன் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்க்குமார்,பாப்பிரெட்டிப் பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் விசுவநாதன், சேகர், பூக்கடை ரவி செல்வம் மகாலிங்கம், நகர செயலாளர்கள் ராஜா, சரவணன், மாவட்ட கூட்டுறவு இயக்குனர் பொண்ணு வேல் பொம்முடி முதல் நிலை ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் சர்க்கரை ஆலை தொழிற்சங்க செயலாளர் சின்னதுரை, தென்னரசு, சந்தோஷ், பாஷா, சிவன், மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட ஊராட்சி வார்டு எண் 18க்கான தேர்தல் இந்த வார்டு பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சக்தி என்பவர் 22-09-2021அன்று வேட்புமனு தாக்கல் செய்தார் அவருடன் மாவட்ட பொருளாளர் திரு குமரவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.