பாலக்கோடு:
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்தப் பிரச்சாரத்தில், தொழிலாளர் விரோதமான 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், கல்வி மற்றும் தேர்வு முறைகேடுகளை களைய வேண்டும், படித்த இளைஞர்களின் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தேசிய சொத்து பணமாக்கல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்து திட்டப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியுடன் இணைந்த குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.42,000 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரச்சாரத்தில் வலியுறுத்தப்பட்டது.
.gif)

.jpeg)