காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி, பைசுஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதிகளில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிவன் கோவில் அருகே உள்ள மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த அப்புகுமார் (35), பூவன் (32), கபிலன் (34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், முனியப்பன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக ஜெகதீஷ் (32), நதீஷ் (31), மோகன் (45) உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்தும் சூதாட்ட பணம் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
காரிமங்கலம் பகுதியில் ஒரே நேரத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டு, இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.gif)

