தருமபுரி குமாரசாமிபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து, இரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில் அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விமரிசையாக ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாடுகளில் தருமபுரி நகரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு திருக்கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
.gif)

