Type Here to Get Search Results !

பஞ்சர் கடை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க கோரிக்கை! தருமபுரியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!


தருமபுரி – செப்டம்பர் 07:

தருமபுரி மாவட்ட பஞ்சர் கடை, நடமாடும் பஞ்சர் வண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செளகத் அலி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தென்னிந்திய அனைத்து மாவட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சக்திவேல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், பஞ்சர் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, பஞ்சர் கடை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், பணியின்போது டயர் வெடித்து விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


மேலும், நெடுஞ்சாலைகளில் நடமாடும் பஞ்சர் கடை வாகனங்கள் மூலம் டயர் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நெடுஞ்சாலைத் துறை அல்லது காவல்துறை சார்பில் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. பஞ்சர் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களை சிறு, குறு தொழில் பிரிவில் சேர்த்து, வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.


இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், பெரியசாமி, ஜிலான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies