Type Here to Get Search Results !

ரூ.560 தினக்கூலி வழங்க வேண்டும்!” தருமபுரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்.


தருமபுரி:


தருமபுரி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த தினக்கூலியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.


ஆர்ப்பாட்டத்தில் பேசிய சங்க நிர்வாகிகள், அரசு அறிவித்த தினக்கூலி ரூ.746 என்றும், மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த தினக்கூலி ரூ.560 என்றும் தெரிவித்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் தற்போது ரூ.410 மட்டுமே வழங்குவதாகவும் குற்றம்சாட்டினர்.


“அரசு அறிவித்த தொகை ரூ.746, மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்தது ரூ.560, ஆனால் வழங்கப்படுவது ரூ.410. மீதமுள்ள ரூ.336 எங்கு செல்கிறது?” என கேள்வி எழுப்பிய அவர்கள், தினக்கூலி தொடர்பான தொகை முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.


மேலும், ஆகஸ்ட் மாதம் முதல் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த தினக்கூலி வழங்கப்படும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


மாவட்ட ஆட்சியர் அறிவித்த ரூ.560 தினக்கூலியை தூய்மை பணியாளர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும், ஒப்பந்த விதிமுறைகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies