இந்தப் பேரணியை காசநோய் மருத்துவப் பணிகள் இயக்க மருத்துவர் பாலசுப்ரமணியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒன் ஹெல்த் மருத்துவமனை மேலாளர் கார்த்திக் முன்னிலையில் பேரணி நடைபெற்றது.
தருமபுரி நான்கு ரோடு ஆவின் பாலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, நேதாஜி பைபாஸ் சாலை, கந்தசாமி வாத்தியார் தெரு வழியாகச் சென்று ஒன் ஹெல்த் மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி, அங்காளம்மன் பேரா மெடிக்கல் கல்லூரி மற்றும் தருமபுரி நாட்டு நலப்பணித் திட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் பேரணியாகச் சென்றனர்.
மேலும், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போதைப் பொருட்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் சந்திரசேகரன், முனைவர் அசோக்குமார், ஜே.சி.ஐ. தருமபுரி விங்ஸ் தலைவர் கோகுல்ராஜ், பிரபாகரன், நிவேதினி, ஜெகதீஷ், சிலம்பரசன், தனலட்சுமி, கணேஷ், ஞானவேல், கபில்தேவ், பிரகாஷ், பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மருத்துவர் மவுலீஸ்வரி, மக்கள் தொடர்பு அலுவலர் கலையரசன், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்றனர். தொடர்ந்து, “போதை இல்லா தருமபுரியை உருவாக்குவோம்” என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
.gif)

