Type Here to Get Search Results !

தாவரவியல் துறைத் தலைவராக பொறுப்பேற்ற பேராசிரியர் பிரபாகரனுக்கு பாராட்டு! அண்ணா தொழிற்சங்கம் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து.


தருமபுரி:


தருமபுரி அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவராக பொறுப்பேற்ற பேராசிரியர் டாக்டர் கோ. பிரபாகரனுக்கு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் தாவரவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த டாக்டர் கோ. பிரபாகரன், கடந்த 2019-ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். கல்லூரியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் இவர், பல்வேறு கல்வித் தகுதிகளைப் பெற்றுள்ளார்.


இந்நிலையில், கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் தாவரவியல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். மேலும், கல்லூரியின் காட்சி வழித் தொடர்புத் துறையின் தலைவராகவும் கடந்த 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.


கல்லூரியின் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் சிறப்பாகப் பங்களித்து வரும் பேராசிரியர் பிரபாகரன், 16-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிஎச்.டி. பட்டம் பெறுவதற்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.


இதையடுத்து, அவரது கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளைப் பாராட்டும் வகையில் அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் சீன் அருள்சாமி, எம்.ஏ., டி.கூப்., ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜி.கே. செல்வராஜ் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் கோவிந்தன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


பேராசிரியர் பிரபாகரன் தொடர்ந்து கல்லூரியின் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies