Type Here to Get Search Results !

தமிழ்தேசிய எழுச்சி மாநாடு குறித்து அரூரில் விசிக செயற்குழு கூட்டம்; மாநாட்டிற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்க தீர்மானம் நிறைவேற்றம்.


அரூர், ஆகஸ்ட் 1:


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தமிழ்தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான மாவட்ட செயற்குழு கூட்டம், தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரூரில் நடைபெற்றது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோபிநாதம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, அரூர் தொகுதி மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா தலைமை வகித்தார். நகர செயலாளர் தீரன் தீர்த்தகிரி வரவேற்றார்.


கூட்டத்தில் மண்டல செயலாளர் ஜானகிராமன், துணை செயலாளர் பாரதிராஜா, மாவட்ட பொருளாளர் வை. திருலோகன், செய்தித் தொடர்பாளர் பெ. கேசவன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட செயலாளர் எம்.எஸ். மூவேந்தன், துணை செயலாளர் ஞானச்சுடர், மொரப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில், ஆகஸ்ட் 17-ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டிற்கு அரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்கும் வகையில் அனைத்து கிராமங்களிலும் வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு வாகனத்தின் எண், ஓட்டுநர் பெயர், கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.


அத்துடன், அனைத்து கிராமங்களிலும் மாநாட்டை முன்னிட்டு விளம்பர பதாகைகள் அமைக்க வேண்டும் என்றும், மாநாட்டிற்கு புறப்படும் அனைத்து வாகனங்களும் அரூர் கச்சேரிமேட்டில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து புறப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, அரூர் நகர செயலாளர் தீரன் தீர்த்தகிரி, மாநாட்டு நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கினார். இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies