Type Here to Get Search Results !

உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை எரித்து தவெக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்.


தருமபுரி, ஆகஸ்ட் 4:


தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாகக் கூறி, தருமபுரி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி தொலைபேசி நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவன் தலைமை தாங்கினார்.


ஆர்ப்பாட்டத்தின் போது, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய தவெகவினர், அவரது உருவப்படத்தை காலணியால் அடித்ததுடன், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


இந்த போராட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த், மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி சத்யா வீரமணி, கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி திலகவதி, மாவட்ட இணைச் செயலாளர் வீரமணி, மாவட்ட இளைஞரணி விமல்ராஜ் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில், நகர செயலாளர் சிட்டி சுரேஷ் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies