தருமபுரி, ஆகஸ்ட் 5:
தருமபுரி மாவட்டத்தில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த 3 வயது மாற்றுத்திறனாளி சிறுமியின் உடலை, பெற்றோர் வராத நிலையில் மை தருமபுரி கைங்கர்யா அறக்கட்டளை அமைப்பினர் தங்கள் குடும்ப உறுப்பினராக கருதி இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
தம்பதியருக்கு பிறந்த இந்த சிறுமி, உடல்நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குழந்தையை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நல்லம்பள்ளி கோவிலூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிறுமி உயிரிழந்தார். குழந்தையின் இறுதிச்சடங்கில் பெற்றோர் பங்கேற்காத நிலையில், மை தருமபுரி கைங்கர்யா அறக்கட்டளை அமைப்பினர் சிறுமியை தங்களது குடும்ப உறவாக கருதி, தருமபுரி பச்சையம்மன் கோவில் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
நல்லடக்க நிகழ்வில், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், மருத்துவர் ஸ்ரீகாந்த், நிர்மலா காப்பக நிர்வாகிகள் மற்றும் சென்னை கைங்கர்யா அறக்கட்டளை பிரதிநிதிகள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 5 பச்சிளம் குழந்தைகள் உட்பட மொத்தம் 235 ஆதரவற்ற மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்டவர்களின் புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
.gif)

.jpg)