தருமபுரி, ஜூலை 30:
தருமபுரி மாவட்டம் மாட்லாம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில், இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத் கேந்திரா – தருமபுரி மற்றும் தனியார் கல்லூரி சார்பில் "நாஷா முக்த் யுவா – விக்சித் பாரத் (போதைப்பொருள் இல்லாத இந்தியா)" என்ற கருப்பொருளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் வெற்றிவேல் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதிமொழி அனைவரும் ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குழு நடனம், ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, விவாதப் போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கையின் அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மை பாரத் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மை பாரத் தருமபுரி அலுவலக பணியாளர் முனியப்பன், அதியமான் டிவி நிறுவனர் கபில்தேவ், மை பாரத் தேசிய இளைஞர் தொண்டர்கள் வெங்கடேஷ், பாவல் ராஜ், விக்னேஸ்வரி, ரேவதி, ராதா, முருகன், சௌமியா, கிருஷ்ணதேவன், பெருமாள், மோகன், ஜோதிமணி, பிரணவ் ராஜ், மாலினி, அம்பிகா, பாலாஜி, பசுபதி, சுகன்யா, கீதா ஐயன்துரை உள்ளிட்டோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஞானவேல், விஷ்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)