Hollywood Movies

Breaking News

தருமபுரியில் பட்டுவளர்ச்சித் துறை பணிகளை அமைச்சர் பெ. மதன்ராஜா ஆய்வு; ரூ.19.20 கோடி பட்டுக்கூடு அங்காடி பணிகள் பார்வை.


தருமபுரி, ஜூலை 31:


தருமபுரி மாவட்டத்தில் பட்டுவளர்ச்சித் துறை சார்ந்த பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா, பட்டுவளர்ச்சித் துறை இயக்குநர் (மு.கூ.பொ.) ரெ. சதீஸ், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப. ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.


முதற்கட்டமாக, ஆட்டுக்காரன்பட்டியைச் சேர்ந்த பட்டு விவசாயி கேசவன் (த/பெ. சிவமணி) அவர்களின் மல்பெரி தோட்டம் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு மனைக்கு நேரில் சென்ற அமைச்சர், மல்பெரி சாகுபடி, இலை உற்பத்தி, பட்டுப்புழு வளர்ப்பு முறைகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பட்டுவளர்ப்பின் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்து விவசாயியுடன் கலந்துரையாடினார்.


தொடர்ந்து, சோகத்தூரில் ரூ.19.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தை பார்வையிட்ட அமைச்சர், கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மின்னணு பட்டுக்கூடு பரிவர்த்தனை (e-Auction) வசதிகள், அங்காடியின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால பயன்பாடுகள் குறித்து துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார்.


இந்த ஆய்வின்போது சேலம் பட்டுவளர்ச்சித் துறை இணை இயக்குநர் செ. பொன்மாரி, தருமபுரி மண்டல இணை இயக்குநர் வெ. இளையராஜா, துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் ஜார்ஜ் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை

Copying is disabled on this page!