தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரி மாவட்ட திமுக சார்பில் தருமபுரி நான்கு ரோடு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது திமுகவினர் தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியபடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன், நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், நகரத் துணைச் செயலாளர் முல்லைவேந்தன், தலைமை கழகப் பேச்சாளர் டி.ஏ. ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அசோக் குமார், கலை இலக்கிய பகுத்தறிவு அணி தலைவர் டி.ஏ. குமார், வெல்டிங் ராஜா, ஏ. மாதேஸ்வரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து, பின்னர் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
.gif)

.jpg)