Type Here to Get Search Results !

தருமபுரியில் நெல் சேமிப்பு மையம், அரவை ஆலை, இராகி கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.


தருமபுரி, ஜூலை 29:


தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் பொது விநியோகத் திட்டப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப. பல்வேறு இடங்களில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். முதலில், மாரவாடி பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த 10,437 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் மழைக்காலத்தில் நனையாமல் பாதுகாக்கவும், மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.


மேலும், FIFO (First In First Out) முறையைப் பின்பற்றி நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அனுப்பவும், பூச்சி தாக்குதல் ஏற்படாத வகையில் பாதுகாக்கவும், காற்றோட்ட வசதியை உறுதி செய்யவும், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தினார். நெல் சேமிப்பு மைய பதிவேடுகளையும் முறையாக பராமரிக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.


அதனைத் தொடர்ந்து, மாரவாடி அருகே செயல்பட்டு வரும் 1,800 மெட்ரிக் டன் திறன் கொண்ட தனியார் நவீன பச்சரிசி அரவை ஆலை மற்றும் 2,500 மெட்ரிக் டன் திறன் கொண்ட தனியார் நவீன புழுங்கல் அரிசி அரவை ஆலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொது விநியோகத் திட்டத்திற்காக அரைக்கப்படும் அரிசி, நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப தரமானதாக இருக்க வேண்டும் என்று அரவை ஆலை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.


பின்னர், மதிகோண்பாளையத்தில் செயல்பட்டு வரும் இராகி கொள்முதல் நிலையத்தை பார்வையிட்ட அவர், விவசாயிகளிடமிருந்து தரமான இராகியை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், சிட்டா, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


மேலும், கொள்முதல் செய்யப்படும் சாக்குகளில் பருவம், மைய குறியீட்டு எண், அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக அச்சிடப்பட வேண்டும் என்றும், அனைத்து பதிவேடுகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, தருமபுரி வட்ட செயல்முறை கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவுப் பொருட்கள் தரமானதாகவும், பூச்சி தாக்கமின்றியும், சரியான எடையுடனும் இருக்க வேண்டும் என்றும், நியாய விலைக் கடைகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகள், முதல்வரின் காலை உணவுத் திட்டம், விடுதிகள், அம்மா உணவகங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு காலதாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


கிடங்கில் உணவுப் பொருட்களை ஒழுங்காக அடுக்கி பராமரிக்கவும், கிடங்கை எப்போதும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கவும் கிடங்கு பொறுப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் துரைசாமி உள்ளிட்ட தொடர்புடைய துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies