Type Here to Get Search Results !

புலிகரையில் களைகட்டிய ஊர் மாரியம்மன், முத்துமாரியம்மன் கோயில் திருவிழா – மாவிளக்கு ஏந்தி திரளான பெண்கள் பங்கேற்பு


பாலக்கோடு, ஆக. 20:
 


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள புலிகரை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஊர் மாரியம்மன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.


இதையடுத்து நடைபெற்ற கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் கூழ் பானைகளை சுமந்தபடி பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு கூழ் படைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.


மாவிளக்கு ஊர்வலத்தில் திரண்ட பெண்கள்

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று நடைபெற்ற மாவிளக்கு ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பம்பை வாத்தியம் முழங்க, பக்தி முழக்கத்துடன் மாவிளக்குகளை ஏந்தியபடி பெண்கள் ஊர்வலமாக ஸ்ரீ ஊர் மாரியம்மன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மாவிளக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


பின்னர் தங்கக் கவச அலங்காரத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை தரிசிக்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டனர். திருவிழாவில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies