Type Here to Get Search Results !

தருமபுரி ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோயிலில் 12ஆம் ஆண்டு விழா – திரளான பக்தர்கள் தரிசனம்.


தருமபுரி, ஆகஸ்ட் 20:
 


தருமபுரி அண்ணாமலை கவுண்டர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் திருக்கோயிலில், 12ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் மற்றும் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை தருமபுரி நகரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழாவை முன்னிட்டு திருக்கோயில் சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்கள் திரளாக பங்கேற்றதையடுத்து விழா சிறப்பாக நடைபெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies