Type Here to Get Search Results !

தருமபுரி வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெறும்.


தருமபுரி, ஆகஸ்ட் 4:


தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 7 (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி நடைபெறும் இந்தக் கூட்டம், காலை 11.00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.


இந்தக் கூட்டத்தில், தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் குறைகளை முன்வைத்து தீர்வு பெறலாம்.


விவசாயிகளின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் பா. ஜார்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies