தருமபுரி, ஆகஸ்ட் 5:
தருமபுரி மாவட்டத்தில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தீர்க்கும் வகையில், ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் அக்டோபர் 16, 2026 (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், இ.ஆ.ப. தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம், காலை 10.30 மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அதியன் கூட்ட அரங்கில் நடைபெறும். இதில் வேலூர் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை மண்டல இணை இயக்குநர் பங்கேற்கிறார்.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள், நிலுவைப் பிரச்சினைகள் மற்றும் குறைகள் குறித்து மனு அளிக்க விரும்பும் ஓய்வூதியர்கள், தங்களது மனுக்களை இரண்டு பிரதிகளில் தயாரித்து 2026 ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெறுவதால், தகுதியான ஓய்வூதியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
.gif)

.jpg)