தருமபுரி, ஆகஸ்ட் 1:
தருமபுரி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027-ன் முதல் கட்டப் பணியான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., இன்று தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு பணி, ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30, 2026 வரை மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிப்படையாக விளங்கும் மிக முக்கியமான தேசியப் பணியாகும். கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களைத் திட்டமிடுவதில் இந்த கணக்கெடுப்பு தரவுகள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தக் கணக்கெடுப்பின் போது, கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடு தோறும் நேரில் சென்று வீடு தொடர்பான 33 வகையான தகவல்களை சேகரிக்க உள்ளனர். பொதுமக்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் சட்ட விதிகளின்படி முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பாளர் (Enumerator) வீடுகளுக்கு வரும்போது, அவரது அடையாள அட்டையை சரிபார்த்து, குடும்பம் மற்றும் வீடு தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்கி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் திருமதி கற்பக வடிவு, தேர்தல் வட்டாட்சியர் திரு. இளஞ்செழியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)