Type Here to Get Search Results !

வத்தல்மலை அடிவார ஜெயவீர வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்த பாராயண பூஜை; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.


தருமபுரி, ஜூலை 31:


தருமபுரி மாவட்டம் வத்தல்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஜெயவீர வரசித்தி ஆஞ்சநேயர் திருக்கோவிலில், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயண பூஜை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில், தமிழ்ப் புத்தாண்டு, ஆடிப்பெருக்கு, மார்கழி மாத சனிக்கிழமைகள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கமாகும்.


அதன்படி, நேற்று நடைபெற்ற சிறப்பு வழிபாட்டையொட்டி, ஆஞ்சநேயருக்கு நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த சிறப்பு வழிபாட்டில் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


வழிபாட்டைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies