Type Here to Get Search Results !

சாலை விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை நல்லடக்கம் செய்த மை தருமபுரி, சென்னை கைங்கர்யா அறக்கட்டளை நிர்வாகிகள்.


தருமபுரி, ஜூலை 2:


கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை, சட்ட நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் மை தருமபுரி மற்றும் சென்னை கைங்கர்யா அறக்கட்டளை அமைப்பினர் நல்லடக்கம் செய்தனர்.


கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் அவரது அடையாளம் மற்றும் உறவினர்களைக் கண்டறியும் வகையில் விசாரணை மேற்கொண்ட போதிலும், அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இதையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர், தருமபுரி பச்சியம்மன் கோவில் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய காவலர் மணிகண்டன், மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் கணேஷ், தன்னார்வலர் கார்த்திகேயன், தன்னார்வலர்கள் தனலட்சுமி, செந்தில் மற்றும் சென்னை கைங்கர்யா அறக்கட்டளை அமைப்பினர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.


மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 220 ஆதரவற்ற மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர். "மரணிப்பவர்களிடமும் மனிதநேயத்தை பகிர்வோம்" என்ற உயரிய நோக்கத்துடன் இந்த சேவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies